சிறிது இடைவெளிக்குப் பின் வாசகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த இருமாதங்களாக பெரும்பாலும் பலரும் கேட்கும் கேள்வி, சளி தொல்லையை எப்படி நீக்குவது?
இருமல், தும்மல், சைனஸ் பிரச்சினை ஆஸ்த்துமா, மூக்கடைப்பு,தொண்டை வலி, காய்ச்சல் மற்றும் பிற சுவாச கோளாறுகள் பற்றியே உள்ளது. குளிர்ந்த காற்று பட்டாலே பிரச்சினை செய்கிறதா? சுலபமாக உங்கள் வீட்டிலேயே குணப்படுத்திக் கொள்ளலாம்.
சனிப் பெயர்ச்சிக்குப் பயப்படாதவர்கள் கூட பக்கத்திலிருக்கும் நபரிடமிருந்து இருமல், சளி, தனக்கு பெயர்ந்து விடுமோ எனப்பயந்து, இடம் பெயர்வது வாடிக்கை தான். ஆனால் அது தேவையே இல்லை. மருத்துவரைத் தேடிப்போகவும் வேண்டியதில்லை.
ஒரு கைப்பிடியளவு புதினா இலையை எடுத்து 250 மி.லி நீரில் போட்டு நன்கு கொதிக்கவிடவும், கமகம என நறுமணம் பரவிவிடும். அத்தகைய நறுமணமுள்ள நீராவியை (ஆவிபிடித்தால்) முகர்ந்து மூச்சை உள்ளிழுத்தால் போதும் இந்த குளிர்காலத்தில் வரும் வைரஸ்நோய்கள் ஓட்டம் பிடித்து விடும். ஆம் புதினா சுவாசம் - புத்துணர்வு சுவாசம்.
தினமும் காலை எழுந்ததும் வீட்டில் உள்ள அனைவரும் ஒரிரு நிமிடங்கள் செய்தால் போதும். உடலும், மனமும் புத்துணர்வோடு சுறுசுறுப்பாக இருப்பதோடு சளி, இருமல், காய்ச்சல் வரவே வராது.
ஆஸ்த்துமா போன்ற தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் 1 (அ)2மணி நேரத்திற்கு ஒருமுறையோ அல்லது தேவைப்படும் போதோ இவ்வாறு செய்யலாம். இதன்மூலம் இன்ஹேலர்களை தவிர்த்துவிடமுடியும். அதே நேரத்தில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தப் பால், இட்லிமாவு பயன்படுத்துவதை தவிர்ப்பது நன்மை தரும்.
ஒரு மணி நேரம் கழித்து மீதமுள்ள ஆறிய புதினா வடிநீரை வாயில் ஊற்றி கொப்பளித்து துப்பினால் வாய் நறுமணத்தோடு திகழும். பல் பிரச்சினைகள் அறவே நீங்கி விடுவதை அனுபவத்தில் கண்டு மகிழலாம்.
குறிப்பாக அதிகாலை பிரம்மமுகூர்த்த நேரத்தில் எழுந்திருப்பவர்களுக்கு புதினா நீராவி மிகுந்த பயன்தரக்கூடியது.
மீதமுள்ள புதினா வடிநீரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் உடல்வலி, சோர்வு, அசதி நீங்கி புத்துணர்வு பெறுவதை உடனே உணரலாம். தோல்நோய்கள், அரிப்பு நீங்கி தோல் புத்துணர்வு பெறும்.
மேலும் வீட்டில் உள்ள ஜன்னல்களை மூடிவிட்டு புதினா நீராவியை வீடுமுழுவதும் பரவச்செய்தால் கொசு மற்றும் பிற பூச்சிகள் ஓடிவிடும். வீடும் நறுமணத்தோடு திகழும்,அதுமட்டுமல்ல மனச்சோர்வை நீக்கி புத்துணர்வு தருவதில் புதினா மிகச்சிறப்பானது.
பல்வேறு குரலிசைக் கலைஞர்கள், மேடைப்பேச்சாளர்கள்MENTHA PIPERITA என்ற ஹோமியோபதி மருந்தை பாடுவதற்கும் பேசுவதற்கும் முன்பாக உபயோகிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அது வேறு ஒன்றுமல்ல புதினா தான். புதினா ஜீரணத்தை தூண்டும் என்பது நாம் யாவரும் அறிந்ததே. கர்ப்பகாலத்தில் வரும் வாந்தியை புதினா இலைகளை முகர்ந்து பார்த்தாலேயே தடுத்துவிடமுடியும்.
உங்கள் குழந்தைகள் காலையில் நேரமாக எழுந்து படிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? புதினா நீராவி நறுமணம் அவர்களுக்கு செல்லும்படி செய்து விட்டால் போதும், உடனே எழுந்து சுறுசுறுப்பாக படிப்பதை கண்கூடாக காணலாம். புதினா வடிநீரோடு சிறிதளவு சாதாரண சுடுநீர் சேர்த்து சிறிது தேன்கலந்து சாப்பிடவும் செய்யலாம்.
புதினா இலைகளைப் பறித்த குச்சிகளை சிறிதளவு மண்சட்டியிலோ அல்லது இடத்திலோ நட்டுவைத்தால் விரைவாக வளர்ந்து நல்ல பலன் தரும்.
புதினாவைப் புதிய கோணங்களில் பயன்படுத்தி புத்துணர்வோடு வாழுங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அமைதியும் ஆரோக்கியமும் ஓங்கட்டும்.
(பின்குறிப்பு : புதினா இலைகள் புதிதாக கிடைக்காதவர்கள் அருகில் உள்ள ஹோமியோபதி மருந்துக் கடைகளில் MENTHA PIPERITA – Q- 10ml வாங்கி பயன்படுத்தலாம்.)
for more reference materia medica j.h.clarke
டாக்டர்.சிவகுமரன், மதுரை
9842477482