Search This Blog

Wednesday, 3 August 2016

diet chart இயற்கை உணவு



உன்னில் தொடங்கட்டும் மாற்றம்
 +++++++++++++++++++++++++++++

உலகம் மாறும்வரை நான் காத்திருக்கமாட்டேன்.




 என் முதலடியே போதும். அதுவே மாற்றத்தின் தொடக்கம். - 
‪#‎காந்தி‬ (ஊழியர் மாநாடு, 1946 ஜனவரி 24)





காந்தியின் வாழ்விலும் பணிகளிலும் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு உண்மை நிரூபிக்கப்பட்டது என்றால், அது ஒரு மனிதன் தன்னந்தனியாளாக ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்ற அவரது நம்பிக்கையே.




 எத்தகைய பெரிய மாற்றமும் ஒருவரிடமிருந்தே தொடங்குகிறது. 




அந்த மாற்றம் அந்த மனிதன் மாற்றத்தை தன்னில் துவங்கும் அந்த கணத்திலிருந்தே ஆரம்பமாகிறது.





இதில் எங்கும் காத்திருப்புக்கு இடமே இல்லை. 



உனது நிறுவனத்திலோ, நீ வாழும் உலகிலோ ஏதோவொரு மாற்றத்தை உருவாக்க நினைத்தால் அதை வேறு யாரோ ஒருவர் துவங்கட்டுமென்று காத்திருப்பது அர்த்தமற்றது. 


உன்னில் அந்த மாற்றம் முழுமையாக வடிவெடுக்கட்டும் என்று காத்திருப்பதும் அர்த்தமற்றது.



 அதுஉலகின் அங்கீகாரம் பெறும் வரை காத்திருப்பது பொருளற்றது.


 எத்தனை பெரிய திட்டமானால் என்ன? 
 தொடங்கு....
 உடனே உன்னில் தொடங்கு!



 - ‪#‎ஆலன்_ஆக்ஸல்ராட்‬



 (தமிழில் டாக்டர் ஜீவானந்தம்)




( ‪#‎வெற்றிபெற_காந்திய_வழி‬ என்ற நூலில் இருந்து - தமிழினி வெளியீடு)

No comments:

Post a Comment

Doctrine of signature

Master wanted to differentiate his MMP from old materia medicas... So he named *Materia medica PURA* That's what he wants to...